வலி என்பது ஒரு பெண்ணுக்கு இரண்டு விஷயங்களில் மட்டுமே சுகமானது... அந்த சுகமான ஒரு வலி இங்கே.. உங்கள் பார்வைக்கு.....
தாயுமானவள்!!!....
விழிகளில் வழிந்தோடும்
கண்ணீர்த் துளி வற்றும் முன்னே
அடுத்தக் கண்ணீர் துளிக்கான
விண்ணப்பம் வந்து
நிற்கிறது......
விண்ணப்பத்தைத் தவிர்த்துவிடும்
அரசியல்வாதியைப் போல்
ஓட நினைக்கிறது மனம்...
ஆனால் விண்ணப்பமோ
வலிய வந்து விழிகளைத் தழுவுகிறது....
கோடைமழை கூட
பொய்த்து விடும்...
விழிகளின் கண்ணீர்
பொய்த்ததில்லை....
ஒவ்வொரு துளியும்
உனக்காக என்பதினால்....
‘நான்’ என்னும் கர்வத்தை
விடச் சொன்னார்கள்...
‘என்’னையே விட்டுவிட்டேன்...
‘நீ’ என்கின்ற கருவினை
எடுத்துக்கொள்ள.....
அனுமதி கேட்டு உள்ளே வர
காதல் ஒன்றும் வேறுதேசமன்று..
என்னுடைய சொந்த தேசம்...
அதனால் தானோ என்னவோ .,
உன்னிடமும் அனுமதி கேட்கவில்லை.,
உன்னைக் காதலிக்க.....
கங்கை நதி வற்றியதாக
சரித்திரமில்லை...
உனக்கான என் கண்ணீர் துளி
வற்றியதாகச் சொல்லும்
காதலுமில்லை...
பத்து மாதம் உன்னைக் கருவில்
சுமப்பவள் தாய்...
பத்து நொடி கூட விடாமல்
உன்னை மனதில் சுமப்பவள்-
தாயுமானவள்!!!!....
காதலிப்பது சுகமெனில்,
வலியைக் காட்டும் விழியால்
உனக்காக காத்திருப்பதும் சுகமே...
இப்படிக்கு
உன்னை மனதில் சுமக்கும் தாயுமானவள்.....
-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

சிறப்பு..
ReplyDeleteநன்றி:-)
Deletereally touching the shores of hearts again again please see my www.elaminnalblogspot.com
ReplyDeletethanks... ll visit ur blog:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇதயம் வருடும் வரிகள்....நன்று.
ReplyDeleteநன்றி :-)
DeleteThis is my first visit to your blog. Now your blog is my Browser's bookmark.
ReplyDeletethanks.. :-)
Delete