மகா
ஜனங்களே...!!!
காதல்
தொலைந்துவிட்டது.....
கண்டுபிடிப்பவர்களுக்குச்
சன்மானமாக
மகிழ்ச்சி
வழங்கப்படும்.....
அறிவிப்பு
அலையாய் பரவ
தேடத்
தொடங்குகிறான்
இளைஞனவன்....
காதலியுடனான
தன் காதலை
மதுபானக்குப்பிக்குள்.....
பொதிந்து
வைத்த பொம்மைக்குள்
தேடிக்கொண்டிருகிறது
குழந்தை...
தனக்கும்
தந்தைக்குமான
காதலை....
கவிஞனோ,
முற்றுபெறா
எழுத்துக்களின்
இடைவெளியில்
தேடுகிறான்,
இலக்கியக்
காதலை.....
எரிந்து
கொண்டிருந்த
மதுரையின்
தீக்கற்றையில்
தேடிக்கொண்டிருந்தாள்
கண்ணகி....
மாதவிக்குத்
தாரைவார்க்கப்பட்ட
கோவலனின்
காதலை....
ஊரே
காதலைத் தேட
நானோ
ஊரடங்கு உத்தரவாய்
சப்தநாடி
ஒடுக்குகிறேன்...
வருடக்
கணக்கில்
தேடிவிட்ட
களைப்பில்....
சஞ்சலத்தில்
சல சலக்கும்
மனதை ,
சிதையில்
ஏற்றிவிடாமல்
மீண்டும்
தேடத்தொடங்குகிறேன்....
ஊடுருவி
என்னைத் தாக்கும்
அவன்
கண்களின் ஒளியில்,
அவனது
கடையிதழ் சிரிப்பில்,
முறுக்கிவிடும்
அவன் மீசை முடியில்,
கரம்
பிடித்து சாலை கடக்கும்
அவனது
சிறு தொடுதலில்,
இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அவனுள் தினம்
தொலைந்துகொண்டிருக்கும்
என் காதலை....
காதலே,
எட்டிப் பார்த்துவிடு...
கெடு
முடிவதற்குள்...
இல்லையென்றால்
,
அவனும்
தொலையக்கூடும்
ஒருநாள்.....
என்னை
விட்டு......
- -ஷோபனா
கோபாலகிருஷ்ணன்

No comments:
Post a Comment