நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ முக்கியமான நபர்களுடன் வாழ்ந்திருக்கிறோம்... சிலரை சந்தித்து இருக்கிறோம்... அப்படிப்பட்ட முக்கியமான ஒரு நபரைப் பற்றிய கவிதைப் படைப்பு இது...
"தொள்ளாயிரத்து
தொண்ணூற்று ஒன்பது...!!!"
கண்ணு ஓரங்கலயே...
தூக்கம் பிடிக்கலயே...
நட்டநடு இராத்திரியில
உம்ம பத்தி நெனப்பு வர,
உசுரு இங்க உருகுதைய்யா....
நெனவு தெரிஞ்ச நாள்
முதல்லா ஒரு நாளும்
நீர் என்னக் கொஞ்சலயே...!!!
உம்ம பேத்திய நீர்
கொஞ்சயில, பொறாமத் தீ
எங்கிட்ட கொழுந்துவிட்டு
எரியுதைய்யா.....!!!
மாங்கா அடிச்சு
பறிக்கையில,
நீர் பார்த்து அடிச்ச தடம்
இன்னும் இங்க மறையலயே....
ஒரு பானை சோத்தத்தான்
சட்டியோட நான் உடைக்க,
நீ பார்த்த பார்வையில
என்னத் தொட்ட பயம்
இன்னும் என்ன விட்டு
போகலயே....
நீர் கொடுத்த மச்சு வீடு
எனக்கொன்னும் வேணாமய்யா....
எம்மனசு நெறஞ்சிருக்க,
உம்மனசோரம் ஒரு
குடிசை போட்டுத்
தாருமய்யா....
நீர் சிரிச்சு நான் பார்த்ததில்ல..
நீர் அழுததா ஊரான்
எவனும் சொன்னதில்ல...
உம்ம நெனக்கையில
மரியாதை பொங்குதய்யா..
ஆனா இந்த பாசமென்னும் மண்ண
மட்டும் எம்மனசு காணலயே...
"என்ன பெத்த ஐயாவுக்கு......"
ஒத்த வரி கடிதமா
நான் எழுதி வச்சதெல்லாம்
எம்பெட்டியில உறங்குதய்யா...
இத்தோட 'தொள்ளாயிரத்து
தொண்ணூற்று ஒன்பது'னு
எங்கணக்கு சொல்லுதய்யா...
"என் செல்ல மகளே...!!!"னு
ஒரு வார்த்த சொல்லுமய்யா...
உசுரு இருக்க மட்டும்,
அது எனக்கு போதுமய்யா...!!!!
-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

என் உணர்வின் பிரதிபலிப்பாய் இதை உணர்கிறேன், நன்றி உணர்த்தியதற்கு.....
ReplyDeleteஇவை உங்கள் உணர்வு மட்டுமல்ல... பலரது உணர்வின் பிரதிபலிப்பு... :-)
ReplyDeleteSomething can be given only by some one ... Yes , no one can replace mom and dad. If it has to be received from them, then it had to be.
ReplyDeletethanks...
Delete