இக்கதையில் வரும் இளைய பல்லவன் என்கின்ற கதாபாத்திரம் தவிர மற்றவை அனைத்தும் கற்பனையே...
காலச்சக்கரம்-பகுதிII
முதல் சாமம் முடிந்து
இரண்டாவது சாமம் தொடங்கும் வேளை.... இளைய பல்லவனும், அருள்மொழித்தேவனும் நகர்வலம்
செல்ல மாறுவேடம் தரித்துக் கொண்டிருந்தனர்...
“ பல்லவரே.... தூதுப்
புறா கொண்டு வந்த செய்தி உண்மையே.... ஒற்றர்கள் இருவர் நுழைந்து விட்டனர்....”
அவசரமாக சொல்லிக் கொண்டே அறையினில் நுழைந்தான் ராஜாந்திரி...
“ அவர்களை பிடித்தாகி
விட்டதா???”
“ஆம் பல்லவரே...
அவர்கள் இருவரும் என்னுடைய பாதுகாப்பில் தான் இருக்கிறார்கள்... கோட்டைத்
தலைவனுக்கு தெரியாமலிருக்கவே என்னுடைய பாதுகாப்பில் வைத்துள்ளேன்.. வேளை வரும்
பொழுது ரகசியமாக இங்கே அழைத்து வருவதாய் உத்தேசம்..”
பலமாக சிரித்துக்
கொண்டே ஆசனத்தில் அமர்ந்தான் இளைய பல்லவன்.. அருள்மொழித்தேவனுக்கும்
ராஜாந்திரிக்கும் பல்லவன் ஏன் நகைக்கிறான் என்று புரியவில்லை.... அருள்மொழித்தேவன்
கோபத்துடனே கேட்டான்.
“ பல்லவரே... ஏன்
நகைக்கிறீர்??? ராஜாந்திரி கூறிய செய்தி எவ்வளவு முக்கியமான ஒன்று... இது எங்களை
அவமதிப்பது போல் அல்லவா உள்ளது...”
“கோபம் கொள்ளாதே
அருள்மொழித்தேவா... நீங்கள் ஒற்றர்களை பிடித்த செய்தி எனக்கு முன்பே
கோட்டைத்தலைவனுக்கு தெரிந்திருக்கும்....”
அருள்மொழித்தேவனும்
ராஜாந்திரியும் வியப்பின் எல்லையை அடைந்தனர்.
ராஜாந்திரி தான்
முதலில் வியப்பிலிருந்து விடுபட்டு, பல்லவனிடன்
தனது ஐயத்தைக்
கேட்டான்.
“ எவ்வாறு தெரியும்
பல்லவரே?? நான் அனைத்து காரியங்களையும் ரகசியமாக அல்லவா செய்து வருகிறேன்...”
பல்லவன் மீண்டும்
நகைத்துவிட்டு வினவினான்..
“நான் உங்களிருவரையும்
இன்று மாலை அழைத்து கோட்டைப் பாதுகாப்பைப் பற்றி ஏன் கேட்டேனென்று தெரியுமா???”
இருவரும் கேள்வியுடன்
பல்லவனை நோக்க, பல்லவன் தொடர்ந்தான்.
“கோட்டைத்தலைவனுடைய
வீரர்கள் காட்டுப்பகுதியில் ஒற்றர்கள் உலவுவதாக கொண்டு வந்த செய்தியின் காரணமாகவே
உங்களை அழைத்தேன்.... அதற்குள் புறாவும் தூது கொண்டு வந்து செய்தியை
உறுதிப்படுத்திவிட்டது.... இப்பொழுது புரிகிறதா?? கோட்டைத்தலைவனின் வீரர்கள்
உங்களை விட விரைவாக இருக்கிறார்கள்...
நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக அவசியம்”
“ அப்படியானால் நாம்
அந்த ஒற்றர்களை கோட்டைத்தலைவன் வசம் ஒப்படைக்க வேண்டிவருமே??”
“ கவலைப்படாதே
ராஜாந்திரி.... அவர்கள் உன் ரகசிய பாதுகாப்பில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை...
அவர்களை எங்கே வைத்திருக்கிறாய்????”
“கடற்புறமுள்ள
என்னுடைய குடிசை ஒன்றில் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறேன்.. அக்குடிசை ஒதுக்குப்புறமாக
இருப்பதால் அவர்கள் அங்கே இருக்கும்வரை யாரும் சந்தேகப்பட வாய்ப்பில்லை... “
“நல்லது.... அவர்களைப் பற்றி ஏதேனும் தெரிந்ததா??? அவர்களிடம் ஏதாவது விசாரித்தாயா???”
“ அவர்கள் இருவரும் ஆண்
ஒற்றர்கள்....அவர்களைப் பார்த்தால் மிகவும் விசித்திரமாக இருக்கிறது பல்லவரே....
உலகம் முழுவதும் சுற்றிய எனக்கே அவர்கள் எந்நாட்டவர் என்று உகிக்க முடியவில்லை...
அவர்களது ஆடை, அணிகலன்களை வைத்தாவது கண்டறியலாம் என்றால் அவையும் விசித்திரமாகவே
உள்ளன... அவர்களிடம் விசாரித்த போது ஒருவன் மட்டுமே பேசினான்.. அவன் எம்மொழியில்
பேசுகிறான் என்றும் விளங்கவில்லை... அவர்களிடம் ஓலை ஏதேனும் இருக்கிறதா என்று
சோதித்தும் பார்த்தாகிவிட்டது.... அப்படி எதுவும் இல்லை.. அவர்கள் எதற்காக இங்கு
வந்திருக்கிறார்கள்???, அவர்கள் நோக்கம் என்ன ?? என்று எதுவும் என்னால் அறிய முடியவில்லை....
மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் பல்லவரே... ஆனால் அவர்களிடமிருந்து இது மட்டுமே
கிடைத்தது” என ராஜாந்திரி பையை திறந்து காட்டினான்.
அதைப் பார்த்ததும் சிந்தனையில்
ஆழ்ந்த பல்லவன், அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரியை நோக்கி,
“ மூன்றாம் சாமம்
தொடங்குவதற்கான அறிகுறிகள் வந்துவிட்டன.... கிளம்புங்கள் என்னுடன்.... ராஜாந்திரி
.,நீ தான் எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்....ம்.. ஆகட்டும்” என்றான்....
நகர்வலம் செல்ல ஆடை புனைந்த பல்லவன், விதி அவனுக்கு புனையப்
போகும் கட்டுகளை அறியாமல் கிளம்பினான்....
------------------------------------------------------------------------------------------------------------
“ஏம்மா கயல், உனக்கு
இங்கிலீஷ் லாம் பேச தெரியுமா???? சும்மா பிச்சு உதர்ற!!! இத்தனை வருசமா குடும்பம்
நடத்துறேன்.. என் கிட்ட கூட சொல்லலியே...”
கயல் முறைத்துப்
பார்த்தாள்... “ பயத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன்... அதுக்கென்ன
இப்ப...”
“பயம் வந்த எல்லாரும்
தாய்மொழில தானா பேசுவாங்க???நீ என்னடானா, ‘I m kayalvizhi, he is my husband . His name is mathiyazhagan. He is
working as a software engineer, I m
a homemaker ,our native is tamilnadu’ னு ஒரு paragraph ஆ யே பேசி
முடிசுட்டியே, இது என்ன Introduce yourself ஆ??!!!”
“கழுத்துல கத்தி வச்ச
எல்லா மொழியும் வரும்... நானாவது இங்கிலீஷ்ல உலர்னேன்.... நீங்க என்ன சார் பண்ணுனீங்க???
“க க க க” னு கத்திய கழுத்துல இருந்து எடுக்குற வரைக்கும் உலர்னியே.... மறந்து
போச்சா??? ”
“அது சும்மா ... அந்த
டைம்ல வார்த்தை வரல.... இதெல்லாம் ஒரு மேட்டரா...”
“ சரி , கொஞ்ச நேரம்
வாய மூடு.. அந்த மொட்டத் தலை இங்கயே பாக்குது...”
“உத்தரவு மகாராணி”
“இதுக்கு ஒன்னும்
குறைச்சல் இல்லை” தலையில் அடித்து கொண்டாள்...
நேரம் போய்க்கொண்டே
இருந்தது.... நான் பாத்த அதே குடிசையில கடைசில உட்கார வச்சுட்டானே இவன் ... இவனை
நம்பி இனிமேல் எங்கயும் வரக்கூடாது.. மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாள்.... கயல்விழிக்கு
ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது... அந்த இடத்தை
விட்டு போகவும் முடியாது... யாருடனாவது பேசினால் தேவலை என்றிருந்தது. யாருடன் பேச
முடியும்.. கூட்டி வந்தவனைத் தவிர வேறு யாரும் இல்லை பேசுவதற்கு...
“மதி..” மெதுவாக
அழைத்தாள்.
“ம்...”
“எனக்கு ரொம்ப போர்
அடிக்குது...”
“அதுக்கு...”
“ஏதாவது பேசு..”
“எனக்கு தூக்கம்
வருது..”
“அது எப்படிடா சாகுற
நிலைமையிலும் தூக்கம் வருதுன்னு சொல்ற...”
“நடு ராத்திரில
எவன்ட்ட கேட்டாலும் இத தான் சொல்லுவான்...”
“சரி... எதுக்கு
என்னை இங்க கூட்டிட்டு வந்த??? கட்டாயம் ரீசன் இருக்கும்”
“நீ ரொம்ப
யோசிக்குற.. சரி சொல்றேன்... எல்லாம் ஒரு முக்கியமான காரணமா தான்...”
“அதான் , என்ன
காரணம்?”
“உனக்கு சுத்த தமிழ்ல
நல்ல பேச வரும்.... எனக்கு வராது.. அதுக்கு தான் கூட்டிட்டு வந்தேன்... ஆனா இங்க opposite ஆ நடக்குது.. உன் வாய்ல
இருந்து மருந்துக்குக் கூட ஒரு தமிழ் வார்த்தைய அவன் கிட்ட பேசல... எவ்வளோ careful ஆ இருக்க.. எல்லாம்
என் நேரம்”
“சரி , விடு...
நெக்ஸ்ட் டைம் கலக்கிடுறேன்... நான் பேசுற தமிழ கேட்டு அவன் ஷாக் ஆகுறானா இல்லையா னு பாரு...
“
“ ஷாக் ஆகுறானோ
இல்லையோ , மறுபடியும் கழுத்துல கத்தி வைக்காம இருந்த சரி...”
“எனக்கு ஒரு டவுட்
மதி...”
‘இந்த பொண்ணுங்க
கேள்வி மட்டும் நல்ல கேட்குறாங்க.. பதில் சொல்றது எவ்வளோ கஷ்டம்னு எங்களுக்கு தானா
தெரியும்...’-மதியின் mind voice விட்டால் வெளியில் கேட்டிருக்கும்... இருந்தாலும் அடக்கி வாசித்தான்.. இங்கிருந்து தப்பிக்க கயல்
தான் உதவ வேண்டும், வேறு வழி இல்லை..
“என்ன கயல்????”
“நாம எப்படி இங்க
வந்தோம்???? அதுவும் கார்ல உட்காந்த 10
நிமிஷத்துல எப்படி வந்தோம்???? என்ன டகால்டி
வேலை பண்ணுன???”
“ஏய்... என்ன...
சென்னை slang ல பேச ஆரம்பிச்சுட்ட... டகால்டி னா என்ன???”
“நான் உன் கிட்ட
டவுட் கேட்ட நீ என் கிட்ட கேட்குறியா... first நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”
மதி சொன்னதைக் கேட்க
கேட்க கயல்விழிக்கு ஒன்று மட்டும் புரிந்தது... இங்கிருந்து தப்பிக்க
வேண்டுமெனில், இனி விளையாட வேண்டியது விதி அல்ல.. தான் தான் என்று...
சக்கரம் சுழலும்..!!!!
-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

gud one
ReplyDeleteநன்றி :-)
Deletemuthal kaalachakkaram puriyavillai,,eppoluthu ethai paditha pinbu than kathaiyae purigirathu. vaalthukkal.
ReplyDeleteaanal oru kelvi inum ethanai paagam ullathu?
நன்றி.. :-)இன்னும் ஒன்று அல்லது இரண்டு பாகத்தில் முடிப்பதாக உத்தேசம்...
Deleteinnum ethana part d ezhudhuva..... suspense podhum ma....... seekirama next part ezhudhi mudi.... awaitin.......
ReplyDeletehey intha part la ye suspense lam mudinjathu d... read it clearly... vetla naan vettiya irukara varaikum ezhuthuven.. don worry.. ;-)
ReplyDeletePadika migavum aarvama irukindradhu...Vaazhthukkal...Adutha veliyeedu epodhu??
ReplyDeleteநன்றி.. :-) அடுத்த வெளியீடு அடுத்த வாரம்:-)
Delete